Data Loading...

வளரி வைகாசி, 2021 Flipbook PDF

வளரி வைகாசி, 2021


133 Views
84 Downloads
FLIP PDF 6.57MB

DOWNLOAD FLIP

REPORT DMCA

நல்ல கவிதை பேசுவ�ோம்

tsup

வைகாசி, 2021 தி.பி 2052 கருவி 13 வீச்சு 01

ஆசிரியர் : அருணாசுந்தரராசன்

வளரியின் பதின்மூன்றாவது ஆண்டு

அருணqசுந்தர‍ராசன் 02 | அழ. பகீரதன் 04 | இரா.சிவக்குமார் 05 சுதந்திரன் 06 | ம.வீ. கனிம�ொழி 07 | ரஜீலா தார்ஷியஷ் 07 | நக்கீரன்மகள் 08 மகிழினி காயத்ரி 09 | வேலணையூர் ரஜிந்தன் 10 | தூரா. துளசிதாசன் 11 கடாரச்சோழன் 12 | அழ.இனியவன் 13 | முனியாண்டி ராஜ் 14 | நெடுங்கேணி ஊர் சிற்றர் 15 சக்திவேல் க�ொளஞ்சிநாதன் 16 | ஆதினி17 | ஈசுவரி குணசேகரன் 18 | ருத்ரா 19 இர. பாக்கியலட்சுமி சுந்தரம் 20 | அ.சா. புவனேசுவரி 21 | இ. அமிதா 22 ரய்லி 23 | அதிவீரபாண்டியன் 24 | ஆ. முருகேசுவரி 25 | அனுமா 26

மூடநம்பிக்கைக் கூக்குரல் பெருந�ோய்கள்

நமக்கொன்றும் புதிதல்ல ஆத்தாளுக்குக் க�ோபம் வரும்போதெல்லாம் அம்மை உண்டியலில் மனித உயிர்களைக் காணிக்கையாய்ப் ப�ோட்ட கதையெல்லாம் பாட்டியும் தாத்தாவும் ச�ொன்னவைதான் வளி உறிஞ்சும் வன்மத்துடன் சீனப் பெருங்கடலிலிருந்து பெரும் சேனையுடன் தேசங்கள் கடந்து உயிர் வேட்டை முடித்து வங்கக் கடல�ோரம் இளைப்பாற வந்து திருவிழாவில் த�ொலைந்து ப�ோகும் சின்னஞ்சிறாரென வாரிச் சுருட்டுகிறாய் வயது வேறுபாடின்றி அலைந்து திரிந்த தெருக்களை அச்சத்தோடு எட்டிப்பார்க்கும் ஆசை மனங்கள் எல்லாம் அவன் செயல் என்றார்கள் அவனே செய்வதறியாது பதுங்கிக் கிடக்கிறான் கருவறைக்குள் க�ொர�ோனா! கடவுளரையே கலங்கச் செய்யும் உன்னைப் பேரவதாரம் என்று பெருமைப்படுத்தி வயிற்றுப் பிழைப்புக் கூட்டம�ொன்று ப�ொய்ப்புரட்டு புராணக் கதைகள் எழுதத் த�ொடங்கும் உனக்கான க�ோயில்கள் உருவாகும் விரதம் இருப்பார்கள் பாத யாத்திரை செல்வார்கள் மூடநம்பிக்கைக் கூக்குரலால் நீயே நாணித் தலைகுனிவாய்

2 |

அருணாசுந்தரராசன்

முதன்மை ஆசிரியர்: ஆதிராமுல்லை ப�ொறுப்பாசிரியர்: முனைவர்

அழ. பகீரதன் (இலங்கை) முதன்மை இணை ஆசிரியர்கள்: பாமினி செல்லத்துரை (இலங்கை) நிம்மி சிவா (ஜெர்மனி) தேவி ரவி (குவைத்)

இணை ஆசிரியர்கள்: சம்பூர் சச்சிதானந்தம் (இலங்கை) ஆதினி (இலங்கை)

முதன்மைத் துணை ஆசிரியர்கள்: த. ச. பிரதீபா பிரேம் (அமெரிக்கா) வீ. அதிவீரபாண்டியன் (தமிழ்நாடு) சுபாஷினி பிரணவன் (இலங்கை) அ. சுகன்யா ( தமிழ்நாடு)

துணை ஆசிரியர்கள்: பிரசன்னசாந்தி (தமிழ்நாடு) திருச்சி சு. பாமா (தமிழ்நாடு)

முதன்மை ஆல�ோசகர்கள்: மீராவாணி (மலேசியா) நெடுங்கேணி ஊர் சிற்றர் (கனடா) க. ய�ோகானந்தன் (இலங்கை) சேந்தை இரவீந்தர் (குவைத்) முனைவர் பாஸ்கரன் (தமிழ்நாடு) இரா. சிவகுமார் (தமிழ்நாடு)

ஆசிரியர் குழு: சீதா ஆறுமுகசாமி (பிரான்சு) நிர்மலாதேவி (மலேசியா) இராஜி ராமச்சந்திரன் (அமெரிக்கா) ச�ௌந்தரி கணேசன் (அவுஸ்திரேலியா) வேந்தன் பேரின்பநாதன் (கனடா) ய�ோகராணி கணேசன் (ந�ோர்வே) சுபஸ்ரீ ஸ்ரீராம் (துபாய்) ஆ. முருகேசுவரி (சவுதிஅரேபியா பரிமளாதேவி (மியான்மர்) வெ. வசந்த் (கத்தார்) நிர்மலா சிவராச‍சிங்கம் (சுவிட்சர்லாந்து) முத்துமாரி பாண்டியன் (மஸ்கட்) சுந்தரி குமார் (அபுதாபி) பரமேஸ்வரன் முத்துக்குமாரு (நெதர்லாந்து)

மின்னஞ்சல்: [email protected] த�ொடர்புக்கு: +91 78715 48146

களத்தினில் வீழ்த்திடும் எதிரியை- வளரி எழுத்தினில் உயர்த்திடும் கவிதையை

ஆசிரியர் குறிப்பு... வளரிக்கு வயது பதின்மூன்று! வளரியின் 13ஆவது ஆண்டு த�ொடக்கத்தை எண்ணி மகிழ்வதா? பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்பு முள்ளிவாய்க்காலில் எம் உறவுகளைக் க�ொன்று குவித்த இனப்படுக�ொலையை எண்ணி ர�ௌத்திரம் க�ொள்வதா என்று தெரியவில்லை! 2009இல் கவிதை அமைப்பாக ஆரம்பிக்கப்பட்டு, அதன்பின் கவிதை இதழாக புதிய வடிவம் பெற்று, இன்றைக்கு பத்தொன்பது நாடுகளில் ஆசிரியர் குழு பிரதிநிதிகளைக் க�ொண்டு வெற்றிகரமாக இயங்கிக் க�ொண்டிருக்கிறது வளரி கவிதை இதழ். புதியவர்களை அடையாளம் கண்டு அவர்களின் கவிதைத் திறனை மேம்படுத்துவதில் வளரி அவர்களுக்கு உதவி வருகிறது. நம்மாலும் கவிதை எழுத முடியும் என்ற நம்பிக்கையை அவர்களுக்குள் ஆழமாக விதைக்கிறது வளரி. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கவிஞர்களைக் வளரி பன்னாட்டுக் கவிஞர் பெருமன்றம் என்ற பெயரில் முகநூல் வழியாக இணைத்து கடந்த ஓராண்டு காலமாக வாரம்தோறும் கவிதைப் ப�ோட்டிகள் நடத்தி அதில் வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை ஊக்குவித்து வருகிறது. வளரிய�ோடு இணைந்திருக்கும் பெண் கவிஞர்களை வளரி பன்னாட்டுப் பெண் கவிஞர்கள் என்ற பெயரில் ஒருங்கிணைத்து அவர்களுக்கான செயல் திட்டங்களையும் தீட்டி வருகிறது.கடந்த ஆண்டு மார்ச் முதல் ந�ோய்த்தொற்று காரணமாக அனைத்துத் தரப்பு மக்களின் செயல்பாடுகளும் முடங்கிவிட்ட நிலையில், இலக்கியவாதிகளுக்கு பெரும் வாய்ப்பாக அமைந்த இணையவழிச் சந்திப்புகளைப் பயன்படுத்தி மாணவர்கள் பங்கேற்கும் கல்லூரிக் கவியரங்குகள், பெண்களுக்கான கவியரங்குகள், மூன்று நாள்கள் கவிதைப் பயிலரங்கம் இப்படி பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்து வளரி உறவுகளின் கவிதை ஆர்வம் குறையாத வகையில் த�ொடர்ந்து செயல்பட்டு வருகிற�ோம். இந்த முயற்சிகளுக்கு பைந்தமிழ் இலக்கியப் பேரவையும், அறம் தமிழ்ப் பண்பாட்டு மையமும் பக்கத் துணையாக இருந்து வருகின்றன. இந்தச் சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு நம் நன்றியைத் தெரிவித்துக் க�ொள்கிற�ோம். இன உணர்வை முன்னெடுத்துச் செல்வதிலும் கவிதை ஆர்வலர்களை மேலும் மேலும் கவிதை எழுதுவதில் ஊக்கப் படுத்துவதிலும் வளரி த�ொடர்ந்து பயணிக்கும் என்ற உறுதிய�ோடு 13 ஆவது ஆண்டைத் த�ொடர்கிற�ோம்.

அருணாசுந்தர‍ராசன்

வளரி இதழ்களை வாசிக்க : https://valari09.blogspot.com/

| 3

நான் க�ொஞ்சம்

விலத்தி! ஒப்பி நின்று சடங்கு துடக்கு என நிற்க எனக்கு இயலா! ஏன் எதற்கு என எனக்குள் கேள்வி மேல் கேள்வி... பட்டு வேட்டிமேல் சற்றும் ஆசை இல்லை மினுங்கும் எதிலும் விறுத்தி இல்லை எனக்கு துலங்கும் அழகு அகத்துள் எனும் நினைப்பு! ஊருக்குக் காட்டி பேருக்குப் பெருமை சேர்க்கப் பகட்டுகள் ஆர்க்க எனக்கு அவதியெதுவும் இல்லை மகிழ்வு மனப் பூரிப்பு எனும் நினைப்பெனக்கு! கூட்டத்தில் கும்மாளம் இட்டு ஆர்ப்பரிக்க ஏன் எனக்கு அவா? திருவிழாவில் கலந்து அறியாமையில் நின்று இப்பிறப்பிற்கு மேலும் பிறப்பொன்று உளதென நம்ப, சாதனை எதுவும் சாதிக்க மறுத்துக் காக்கவென இல்லா இறைவனை வேண்டக் கருத்தெதுவும் இல்லை

4 |

வீறாப்பு படைப்பாக்கம் நமக்குள் இருக்க நமக்கேன் இன்னோர் இறை! ந�ோய் ந�ொடி என்று நைந்து ஆய்ந்து மருத்துவரைக் கேள்வி மேல் கேள்விக் கணை த�ொடுத்து உடல் காக்க ஊர் த�ொறும் பேர் பெற்ற மருத்துவமனை தேடிக் குளிகைகள் முழுங்கிடவும் தெளிவது இல்லை தேயும் ஆயுளில் ப�ோகுதே இளமையெனக் கலங்கலும் இல்லை கசப்பையும் பல்லால் கடித்து அரைத்து மென்று முழுங்கும் எனக்கென்ன துவழல்! நரைத்த முடியில் நயப்பு எனக்கு வியப்பு என்ன வீறாப்புத்தான் எனக்கு!

அழ. பகீரதன் காலையடி இலங்கை

இரா.சிவக்குமார்

வாய்க்கரிசி..!

மதுரை, தமிழ்நாடு

வயிற்றைக் கிழித்து

சிசுவைக் க�ொன்ற குஜராத் பாணிதான் க�ொர�ோனாவுக்கு கம்பளம் விரித்து வாரணாசி பாடையில் இந்தியர்களை வழியனுப்பி வைக்கிறது! தப்ளிக் ஜமாத்தில் தாண்டவமாடிய மதத்திமிர் கும்பமேளாவில் குப்புறப்படுத்துவிட்டது! நாடு முழுவதும் எரிகின்ற பிணங்களிலிருந்து நிர்வாக லட்சணத்தின் கருகிய நாற்றமடிக்கிறது! ஐந்து கில�ோ தானியத்தை மறுக்காமல் வாங்கிக் க�ொள்ளுங்கள் வாய்க்கரிசிக்கு ஒருவேளை பயன்படலாம்!

| 5

நினைவ�ோடை மரம் வெட்டிப் பால் சேர்த்து

சுதந்திரன்

மலேசியா

வீடு திரும்பும் வேளையிலும் ‘பெரியவன் நல்லா காளான் சாப்பிடுவானே...’ என மீண்டும் ஒருமுறை வெட்டைச் சுற்றி வலம் வரும்

ஒரு வாரமாய் நினைவு தப்பி ஸ்தம்பித்துக் கிடந்தாலும் நான் கூப்பிடும்போது மட்டும் கன்னத்துச் சுருக்கங்கள் மேல் விரிந்து விரிந்து துடிக்கும்

இராத்திரி பத்துக்கும் மேலாயிட்டா ‘ப�ோனவன் ச�ொல்லிட்டாவது ப�ோனானா வரட்டும் அவன்...’ என்று வசவு தரும்

‘பவ்வியம்மா’என பாட்டிக்கே பெயர் வைத்த முதல் பெயரன் நான்

மனசுக்குள்ளே ‘எங்கே ப�ோனான�ோ நல்லபடியா திரும்பனுமே...’ கடவுளுக்குக் க�ொஞ்சம் கருணை மனு ப�ோடும் மீள்பார்வைப் புத்தகங்கள் வாங்கியாக வேண்டுமென்றால் ‘எவ்ளோ ‘ ‘ஐய்யோ அவ்ளவா?’ என்றே எதிர்ப்பாய்க் கேட்டாலும் காலையில் ஆறுக்கும் முன்னே எழுந்து காலைக் கும்மிருட்டில் சிம்னி விளக்கடியில் காசை ஒவ்வொன்றாய் தடவித் தடவிக் க�ொடுக்கும் ‘அப்பு, நீ பாசாயிடுவ’ உற்சாக மருந்தாய் இருந்து தன்முனைப்பு கூட்டும்

6 |

பவ்வியம்மா... நீ சென்ற பிறகும் சேர்த்து வைத்திருக்கிறேன் முதல் முதலாய் தாத்தாவும் நீயும் சேர்ந்து வாங்கிய ர�ோத்தான் பெட்டியையும் அதனுள் ஆறாம் வகுப்பு அரசாங்கப் பரிட்சையில் ஐந்து ஏக்களுக்காய் கிடைத்தும் த�ொலைந்து ப�ோனதாய் எண்ணியிருந்த அந்த வர்ணம் மாறிப் ப�ோயிருந்த என் மலாய் ‘காமுஸ்’ஐயும் அதைவிட ர�ொம்ப ர�ொம்பப் பத்திரமாய் உன்னைப் பற்றிய எல்லா மயிலிறகு நினைவுகளையும்

ப�ோதி மரம்

ப�ொல்லாத காற்றுக் குழல் கலைத்துப் ப�ோனது

ப�ொங்கிடும் அலையும் கால் நனைத்துப் ப�ோனது தகித்திடும் மணலும் பாதம் சுட்டு எரித்தது காற்று நீர் நிலம் ஒருசேர விளையாடும் ஆழியின் பரப்பில், கடற்பறவை ஒன்று தலைமேற் பறந்து சென்றது சிப்பிகள் மணலில் சிதறிக் கிடந்தன; எந்தெந்த முத்துக்கள் அணிகலனாய்க் கழுத்தேறும�ோ ? எந்தெந்த கடல் துளிகள் மழைக்குதவும�ோ ? எந்தெந்த மீன்கள் உணவாகும�ோ? கடற்கரையும் ப�ோதி மரம்தான் !

ம.வீ. கனிம�ொழி அமெரிக்கா

வளி தேடல் உயிர் எழுத்துகள்

ந�ொடிகளாக நிமிடங்களாக நேரங்களாக காலக்கணக்கைக் காட்டுகின்றன உயிர்வளியைத் தேடும் நேரத்தில் உயிர் உயிர் தான் என்பது இதுதான�ோ? உயிரின் மதிப்பை அறிவ�ோம�ோ உடல்விட்டு வெளி செல்லும் வளியே உன்னை எதிர்நோக்கும் விழிகள் ஏராளம் ஏராளம்

ரஜீலா தார்சியஷ்

அஞ்சு கிராம‍ம், கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாடு

| 7

பெருந்தொற்று உலகை உலுக்கும் கிருமி

உழைப்பை நிறுத்தி வைக்க உலையிலிட அரிசியும் இன்றி உண்டி சுருங்கிய மக்கள�ோ பலர் மரணம் நாளும் நெருங்க மனக்கூட்டுக்குள் ஏத�ோ அழுத்த மனைச் சுவருக்குள் அடைபட்டு ம�ௌனமாய் விழிபிதுங்கிப் பலர் உயிரைக் கையில் பிடித்தபடி அடுத்த உயிரைக் காப்பாற்ற மண்ணில் தெய்வங்களாக உலவும் மருத்துவப் பணியாளர் பலர் எப்படியேனும் க�ொல்லுயிரிக்கோர் ஔடதம் கண்டுபிடிக்க நாளும் தூக்கம் த�ொலைத்து ஆய்வில் துடிப்புடன் விஞ்ஞானிகள் பலர் சாவுகளை வைத்து நன்றாகச் சாணக்கிய காய்களை நகர்த்தும் பெருந்தொற்றாளர் பலர் இருக்க எந்தத் த�ொற்றும் குறைந்திடும�ோ?

நக்கீரன்மகள் டென்மார்க்

8 |

பாவங்களைக் கழுவும் கங்கைகளாக அல்ல

அவரவர் வாழ்வை அவரவரே!

யாரும் நெருங்க அஞ்சும் காட்டாறாக.. சில நிமிடங்களேனும் வாழ விரும்பும் கண்கள் கட்டப்பட்டுக் காலநதியில் அமிழ்ந்து கிடந்த எங்கள் வாழ்வின் ஆதூரங்களை ஆரவாரங்களை இறுகிய உணர்வுகளால் நத்தையென சுருங்கிய அனைத்தையும் மீட்டெடுக்கும் நம்பிக்கைய�ோடு இருகை உயர்த்தி எங்கள் சிறகுகளால் காலநதியில் மேலெழும்பிப் பறக்கிற�ோம் உங்கள் அன்பின் மந்திர உச்சாடனங்களில் இலயித்துக் கிடக்க விரும்பவில்லை உங்களைப் ப�ோன்றே உணர்வுகள் படைத்த உயிர் இனமாய்க் கருதுங்கள் அது ப�ோதும் கருணையின் கண்கள் எனக் காத்து நிற்போம் நாங்கள் என முன் வரவேண்டாம் எவரும் உங்களைப் ப�ோலவே எங்களுக்கும் வெற்றி த�ோல்வி வந்து அடையட்டும் வாழ்வெதுவென நாங்களே தெரிந்து க�ொள்கிற�ோம் எங்கள் உடைகளின் மீது உங்கள் விமர்சனங்களை எறியாதீர்கள் உடுப்புகளைத் தாண்டியும் ஊறுகின்ற இழி பார்வைகளால் எங்களை நெளிய வைக்காதீர்கள் அது ப�ோதும் எங்களுக்கு உங்கள் வாழ்வை ஒளிரச் செய்யும் சுடர் விளக்கென எங்கள் பிம்பங்களைக் கட்டமைக்காதீர்கள் ஏனெனில் எம் வாழ்வின் இருளில் பிரகாசிக்கிறது உங்கள் ஒளிவாழ்வு நாங்கள் நாங்களாகவே இருந்து விடுகிற�ோம் உங்களைப்போலவே இந்த உலகில் எமக்கும் ஒரு வாழ்வு இருக்கத்தானே செய்கிறது எங்கள் விரல்களால் எங்கள் வரலாறை எழுதிக் க�ொள்கிற�ோம் க�ொஞ்சம் விலகுங்கள் பின் த�ொடர விரும்பவில்லை இணைந்து பயணிக்கலாம் அவரவர் வாழ்வை அவரவரே வாழ்வோம்

மகிழினி காயத்ரி கள்ளக்குறிச்சி, தமிழ்நாடு

| 9

முகநூற் பதிவு முகில்களற்ற வான்வெளியாகத்

தெளிந்து கிடந்த வெற்று நாட்களை நட்சத்திரங்கள் சூடி அழகு சேர்த்தன அவள் நாணத்தில் உதித்த குறுநகை! வறட்சியில் வாடித் தளர்ந்த பயிர்களின் பெருந்துயர் தீர்த்தத�ொரு கார்முகிலாய் எந்தன் தவிப்பினைத் தீர்த்ததந்தப் பேர�ொளியாள் ஓரவிழிப் பார்வை! அந்தி சாய்கையில் செந்நிற மேற்கை அள்ளி அப்பிய வதனத்தைச் சூடியே என் செடிகளற்ற தெருவை யெல்லாம் நாளும் பூக்களாக்கிப் ப�ோகிறாள்! இவ் ஊரடங்கு காலத்திற்கூடத் திருவிழா நாட்களையே நினைவில் ஏற்றுகிறாள் அவள் சேலை உடுத்திய தேவதையாய் இன்று பதிவுசெய்த முகநூற் பதிவில்!

வேலணையூர் ரஜிந்தன்

இலங்கை

10 |

சிறகு முளைக்காத காக்கைகள் சதைகிழிந்த ஓடையில்

குருதி வடிந்தோடியது மேனியெங்கும் சிவப்பின் சாயம் ப�ொரிந்தன முட்டைக்கூடுகள்... திறக்காத அலகுகள் க�ொத்திய புழுக்கள் நிறைக்கின்றன வயிற்றுக்குழியை... வலுப்பெறாத இதயப்பைகள் கனவுகளும் கற்பனைகளும் நிரம்பி வழிகின்றன... குச்சிகள் அடுக்கப்பட்ட குடிசைக் கூடுகள் நித்திரை க�ொள்ளும் பஞ்சணைகள்... தூங்காத விழிகள�ோடு வாயிலில் காத்திருக்கும் காவல் கிழடுகள்... கிழடுகளின் கதகதப்பில் குளிர்காயும் இளவல்புள், கிழடுகள் கதைப்பதைக் கண்டுக�ொள்ளாமலே பறக்கின்றன சிறகுகள் முளைக்காத காக்கைக் குஞ்சுகள்

தூரா. துளசிதாசன் தமிழ்நாடு

| 11

காதல்

உண்மைக் காதல் தெய்வீகக் காதலெல்லாம் புராணக் கதைகளாய், தூசுபடிந்து ப�ோச்சு

காதல் அது

தெய்வீகமானதாய் புனிதமானதாய்ப் ப�ோற்றிய காலம் இறந்த காலமாய் காலாவதியாய்ப்போன காதல் சாதி, மதம் பார்த்ததில்லை சிகப்பு கறுப்பு பார்த்ததில்லை பணம், மாடமாளிகை பார்த்ததில்லை படிப்பு, வேலை பார்த்ததில்லை

நேற்று திருமணம் இன்று விவாகரத்து நிலைமை மிகவும் ம�ோசமாச்சு அதுவே சர்வ சகஜமாச்சு காதல் வெந்தும் வேகாத பண்டமாய்க் குப்பைத்தொட்டியில் அடைக்கலமாச்சு

அன்றைய நிறைவேறா காதல் மரணத்தில் சங்கமித்தது புனித நீரில் சாம்பலாய்க் கரைந்தது தலைகீழாய்ப்போன இன்றைய காதல் காம லீலையாய் சதை பிண்டங்களின் வேட்கையால் பணத்தின் ப�ோதையால் கள்ளச் சந்தையில் மலிவாய் விலைப�ோகும் நிலையாச்சு

கடாரச்சோழன் ஈப்போ, மலேசியா

12 |

முள்ளிவாய்க்கால் எம் கீழடி உயிர்களின் மந்தையாய்

அவஸ்தைகளின் அனாதரவில் பிணங்களைக் கிளறி காப்பரன் அமைத்து மரணத்தின் ந�ொடிகளை மனத்தினால் கணக்கிட்டுக் க�ொலைக்களமான சாம்பல் நிலத்தில் வெள்ளிகள் பூத்த மே 18இல் நெஞ்சு கனக்க நினைவது ஏந்தும் தமிழர்தம் மான நாள் சூரியச்சிதறலாய், கானல் அலைகளாய் தகித்துப்புழுங்கும் அகத்து நெருப்பாய் முல்லைமண் குறுக்கிய முள்ளிவாய்க்கால் வெள்ளி நிலாமுற்றம் பட்சிகள் பறக்காத கரம்பை நிலமல்ல நிலத்தடி மூழ்கிய இன்னொரு ச�ோழ மண் ஈழத்தீவிற்கு இருநூறு கதையுண்டாம் பண்டார வன்னியன் படைகண்ட கதை வன்னிமைகள் எதிரியை வழிமறித்த கதை யானை அடக்கிய அரியாத்தை கதை சங்கிலிய அரசன் பகை விரட்டிய கதை கதைகள் நீள்கின்றன வரலாற்றுப் பாம்பாக

விடுதலைப்போரில் பல லட்சம் கதைகூறும் ஈழப்போர் நடாத்திய பிரபாகரன் காலத்து மானக்குடிகளின் முடிவில்லாப்போரது முள்ளிவாய்க்கால் வஞ்சிப்புக்கொலை செய்த சிங்களப் பேய்க்கதைகள் உள்ளாக சரித்திரம் பேசும் மே 18 சூரியக்குடையின் கீழ் சந்திரவட்டத்தின் பரிம அழகில் மாண்புற வாழ்ந்தவர் கண்ணாடிக்கூண்டினில் கல்லடிபட்டதாய்ச் சிதறுண்ட இனமதில் கண்ணீர்த்துளிகளால் செதுக்கப்பட்ட எம் முள்ளிவாய்க்கால் பெருநிலம் இன்னொரு கீழடி த�ோண்டிப்பாருங்கள் எலும்புகள் மட்டுமல்ல வீர இனமதின் ர�ோசமும் கையை உரசும்

அழ.இனியவன் பிரான்சு

| 13

இடைவெளி மறந்த உயிர்களை

விழுங்கி ஏப்பமிட்டுக் நகர்கிறது த�ொற்றொன்று முகக்கவரி மறந்தவர்கள் முகவரியைத் த�ொலைத்து மறைகிறார்கள் கட்டுப்பாடென்பது கட்டளையல்ல சூழலைப் புரியா மனிதர்கள் சூளையின்றி வீசப்படுகிறார்கள் தெருக்களில் உறவுகளாயிருந்தால் என்ன உற்றாராக இருந்தால் என்ன எச்சிலில் பரவும் நச்சில்கள் எவற்றையுமே விடுவதில்லை இரக்கம்தவிர அடங்கியிருங்கள் என்றுதானே ச�ொல்கிற�ோம் நீங்கள் அடக்கமாகாமலிருக்க கெடுபிடிகள் இறுக்குகிற�ோம் மண்டைத் திமிரில் மரணம் மறந்து வாசல் கடக்கிறீர்கள் ம�ௌனம் காத்துப் பாய்கிறது பெருந்தொற்று ப�ோர்க்கால பயங்களில் பதுங்கியிருக்கக் கூறுகிற�ோம் பாசங்கள் மறந்து வீதிஉலா வருகிறீர்கள்

இடைவெளி காப்போம்

உயிர்களின் மதிப்பையுணர்த்த மருத்துவமனைகள் மின்னலாய்ச் சுழல்கின்றன வெள்ளையுடை தேவதைகள் நடக்கவும் நேரமின்றி பறக்கிறார்கள் கவச உடைகளில் உள்ளுக்குள் வெந்து கரம் பிடித்து அணைக்கிறார்கள் உணவு வேளைகளும்கூட அவர்களுக்கு அவசரகதிகளில்தான் நிகழ்கின்றனவாம் சங்கிலித் த�ொடர்களை அறுத்தெறியத்தான் ச�ொல்கிறார்கள் கண்முன் களவாடப்படும் உயிர்கள் காக்க கால்களைக் க�ொஞ்சம் கட்டிப் ப�ோட்டால் என்ன சுவை தேடும் நாவுகளைச் சுகமாய் இருந்தால் பார்த்துக் க�ொள்ளலாம் மகிழி தேடும் மனங்கள் மன்பதைத் தெளியும்வேளை உலா வரலாம் உங்களுக்கல்ல எங்களுக்கல்ல .. உயிர்கள் அனைத்துக்குமாய் இடைவெளி காப்போம்

14 |

முனியாண்டி ராஜ் மலேசியா

வளரிக்கு ஒரு வாழ்த்து! வானம் முட்ட வளருது வளரி

வண்ணத் தமிழே உலகெங்கும் உயருது பார் எங்கும் வாழ்கின்ற எம் தமிழ் உறவுகளைக் கவிதை எனும் அன்பால் அரவணைத்து அன்னைத்தமிழ் தான் அருமையான ஆழமான ம�ொழியென உரத்துக் கூறும் வளரியே உன்னை வாழ்த்துவதில் பெருமை அடைகின்றேன் வளர்ந்து வரும் கவிஞர்களை வளர்த்தெடுக்கும் உன்னை என்ன ச�ொல்லிப் ப�ோற்றுவது எப்படி வாழ்த்துவது பற்பலரின் அயராத முயற்சியால் பெரு வளர்ச்சி உற்ற வளரியே அகவை பனிரெண்டு கடந்து உன் பயணம் த�ொடர்கிறது பண்டைத்தமிழ் பாரெங்கும் விரிகிறது விண்ணளந்த தமிழன் வீரம் மண்ணிடை மறைந்ததென்று மார் தட்டுகின்ற மூடர்கள் மத்தியில் எழுச்சி க�ொள்ளும் எங்கள் தமிழ் என்றுமே அழியாதென சங்காக முழங்குகின்ற வளரியே உந்தனுக்காய் சங்கத்தமிழில் ஒரு வாழ்த்து சரித்திரத் தமிழால் பல வாழ்த்து காலமெல்லாம் நீ வாழ வேண்டும் கதிரவனாய் தமிழ் ஒளி வீச வேண்டும். வாழ்க வளரியே நீ வாழ்க. தங்கத் தமிழே தரணி எங்கும் வாழ்க

நெடுங்கேணி ஊர் சிற்றர் கனடா

| 15

(இன எழுச்சிநாள் கவிதை)

எழு வேங்கையே!

தமிழினத் தகையனே வேண்டுமா விடுதலை - புறஞ்சூழ்

தடைகளை உடைத்தெறிந்து தேடுவுன் அடைதலை துயிலதைத் துடைத்துநீ உணருவுன் நிலைதனை - புரட்சி புதிதல்ல உனக்கென்றும்; ஏந்துவுன் கலைதனை வரிபுலிக் கெதற்கடா விடிந்தபின் உறக்கமும் - அழுத்திப் பிடரிபிடித் திழுக்கவா இன்னுமுன் கிறக்கமும் எதிரிக்குத் தயவில்லை தவிர்க்கவுன் இரக்கமும் - மிதித்து நிமிர்ந்துநீ நின்றாலே அடைவாயுன் துறக்கமும் ப�ொய்யுரைத் தழுத்துவர் திமிறிநின்று தடுத்தெழு - க�ொண்ட வரலாறு திருத்துவர் மெய்யுரைத்து மறுத்தெழு அடிமையாத லன்றிநீ எதிர்வினை த�ொடுத்திழு - உண்மை உணர்ந்திட மறுக்குங்கால் ஓரமாய் அமர்ந்தழு அழுக்கினி லுழல்வதால் இழுக்குதான் படிந்திடும் - இப்படிக் காணுனை நாளைய உலகமும் கடிந்திடும் எத்திசை ய�ோடினும் பகல�ொன்று விடிந்திடும் - உதைத்த கால்பிடித் தழுவதால் உய்யவா முடிந்திடும் ஈகையர் பலரும் இங்கேதாம் பிறந்தனர் - க�ொண்ட வேட்கையின் பயனாய் சுகவாழ்வு துறந்தனர் உயர்குடி யெங்கும் மறவர்தாம் நிறைந்தனர் - உற்ற உறக்கத்தின் நீட்சியில் மாக்கள்தாம் மறந்தனர் பரிதிமாற் தமிழ்கொண் ட�ொருகூட்டம் கூட்டினன் - பாரதி தாசன்வந் ததற்கொரு தன்மானம் ஊட்டினன் பாவலேறு கூட்டத்துள் புரட்சித்தீ புகட்டினன் - பிரபா கரனார�ோ சுடரதனை பெருந்தீயாய் மூட்டினன் தலைமைசா லறிஞர் பலர்காத்த சூல்நெருப்பு - இனமானங் காப்ப த�ொன்றே கையிருக்கும் நல்துருப்பு விட்டொழி யின்பின் விசும்பெங்கும் சூழ்கருப்பு - ப�ொய்யா விளக்கு க�ொண்டுகாப் பத�ொன்றே நம்பொறுப்பு உன்னினங் கேட்குதுன் வலிமைமிகு வருகையே - உந்தன் ஒற்றுமை அதுக�ொண் டுருட்டலாம் உலகையே எழுந்தா லின்றியுணக் கேதிங்கு வாழ்க்கையே - ப�ோதுமுன் நித்திரை; வெடித்து வெகுண்டெழு வேங்கையே!

சக்திவேல் க�ொளஞ்சிநாதன் அட்லாண்டா

16 |

முள்ளிவாய்க்கால் முகாரி முள்ளிவாய்க்கால்,

பெயரைக் கேட்டாலே அடி வயிற்றில் அனல் க�ொதிக்கும் அதைத் தாங்காக் கருவிழிகள் புனல் பெருக்கும் கால்கள் தள்ளாடி கை தளர்ந்து உயிர் மெய் விட்டுப்போகும் அகால மரணத்தின் அக்கிரமம் நிகழ்ந்த அக்கினி நிலம் அது

பூவையும் பிஞ்சையும் பிடித்து வந்து நெஞ்சைப் பிளந்து, இதயமெடுத்து, கரிகாலன் இருக்குமிடம் தேடும் இனவாத வதை முகாமில் வேற்றுக்கிரக வாசிகள்போல் வேரறுந்து கிடந்தது ஆதித் தமிழ்ச் சாதி மரணத்தின் வாயிலில்,

ஆமிக்கட்டைகளின் முள்வேலிக்குள் அநாதரவாய்க் கிடந்த ஆண்டவரினத்தை ஒருவாய்க் கஞ்சிக்கும் ஒரு மிடறு தண்ணீருக்கும் மரணத்திடம் கையேந்த வைத்த தர்மத்தின் புதைகுழிக்குள் இராணுவ இதயங்களும் புதைக்கப்பட்டிருந்தன பேரினத்தின் சிற்றறிவுச் செயலால் செல்லடித்துச் சிதைத்த செல்வங்களின் செங்குருதி படிந்ததால் வலிய�ோடு அடிபணிந்த வரலாற்று வடு சுமந்த அடங்காமண்ணைப் பற்றி என் ச�ொல்ல? ஊரிழந்து உயிரிழந்து ஊணிழந்து உயிர் சுமந்த ஊனங்கள், தாம் உரிமையும் இழந்தோமென தவித்தபடி பேச்சிழந்து மூச்சிழந்துப�ோன கண்ணீர்க் கதையை யாரறிவார் வந்தாரை வாழவைத்து வந்த பகை வீழவைத்து செந்தமிழை ஆளவைத்த வேங்கைகளின் பூமியில், க�ொத்துக்குண்டுகள் உழவு செய்ய உயிர் விதைத்து செந்நீர் தெளித்தன ஆதிக்க மிருகங்கள்

செந்நீரின் வாசனையில், தேகம் புசித்த மனிதரல்லாத காமுகர் முன் உயிர் காக்க மறுத்தது மானம் தாயக மண் மீட்க தன் குருதி குடித்தே க�ொப்பளிக்கக் காத்திருக்கும் குருளைகளின் எரிமலை காத்துக் கிடக்கிறது வாயிலில் காலமாகிப் ப�ோனவர்களின் கனவு ஆண்டவர் மறந்தாலும் எம்மை மாண்டவர் மீட்டிடுவர் கருவறை கல்லானாலும் கல்லறைகள் அருள்பாலிக்கும் காலன் சிதைத்தாலும் காலம் பதில் ச�ொல்லும் காத்திருப்போம்

ஆதினி

திருக�ோணமலை, இலங்கை

| 17

தீஞ்சுவை

காவல் தெய்வமாய் தமிழ்

திகட்டா தேமாங்கனி தேடு அகன்று ஆழமான விழியால் தேடு குறளை ஒத்த மக�ோன்மம் வேறேதுமுண்டோ?

மரபின் வளர்ச்சி த�ொன்மையின் த�ொடர்ச்சி தமிழ் மாணவன் கல்லறையில் சாய்ந்து கிடந்தான் தாய்த் தமிழின் உயிர்ப்பொருளை ம�ொழி பெயர்க்க வலு ஏது இங்கு எவர் துணையுமின்றி ஒளிர்ந்து மிளிர்ந்தது எம்மொழி

ஈசுவரி குணசேகரன்

அனைத்திலும் சுரந்தவன் தமிழ் எனும் மூவெழுத்து மந்திரத்தில் முக்குளித்து முங்கியெழுந்தவன் தமிழால் வைதாரையும் வாழவைக்கும் தமிழ்க்கூறு

பக்திய�ோடு ஞானமும் தமிழ�ோடு சுதி சேர்க்கும் சாகா கலை எம் ம�ொழி வணிகம�ொழி ஆங்கிலமன்றோ! சாகும்வரை உரமிட்டு சட்டம�ொழி லத்தீனன்றோ! உணர்வலையை வளர்க்கும் ம�ொழி இசைம�ொழி கிரேக்கமன்றோ! எம்மொழியின் விந்தைகள் தூதும�ொழி பிரெஞ்சுதானே! எல்லாவற்றையும் தன்னகத்தே க�ொண்டது வேற்று ம�ொழிக்கு உண்டோ? எந்த ம�ொழிக்கும் இல்லா தாய் தந்த செழுமை தமிழ்ப்பால் தான�ோ! பிறந்து சிறந்த ம�ொழியினூடே அதெப்படி... அதெப்படி? சிறந்தே பிறந்த ம�ொழி என் பூட்டன் இதயவிதானத்தோடு பேசி தந்த தமிழன்றோ! உணர்வை வார்த்தெடுக்கிறாய் ககரவர்க்கம் தகரவர்க்கம் பழங்குகைகளில் கல்வெட்டு எம்மொழியிலும் இல்லா நடுகற்களில் வட்டெழுத்து விந்தைக்குள் சிந்தனை செப்பேட்டில் குறிப்புகள் மலையளவு அறநூல்கள் அரச சாசனங்களில் முத்தெழுத்துகள் மலைத்துப் பார்க்கும் குமரிக்கண்டமதில் த�ோன்றல் முக்கோடியினது கண்கள் உரைக்கும் தருணம் அகத்திணை ஏழும் சுவாசப் பையில் புறத்திணை ஏழும் குறைந்த வளி பகுத்துத் தந்தது எம்தமிழ் உறுப்புகளின் தேய்மானம் பாலுண்டு ச�ோறுண்டு அளவில் சரியும் உடலை வளர்த்தோரும் மூலர் தந்த மூல மந்திரம் உண்டு முத்தமிழாய் இலங்கும்

18 |

பூச்சோங், மலேசியா

தமிழாகாரம் மட்டுமே உண்டு புசித்தோரும் உண்டு தமிழ்க்குருதியை மேனிக்குள் க�ொண்டு சேர்த்தார�ோ முக்காடிட்ட இராமலிங்கர் யாமறிந்த ம�ொழியில் தமிழ் ம�ொழியே இனிமை பாகாய்ப் பகர்ந்தான் முண்டாசுக் கவிஞன் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்றான் பாரதிதாசன் நம்பிக்கையின் கடைசித்துளிகள் ஒட்டியிருக்கின்றன இன்னும் க�ொஞ்சம் தமிழ் காக்கும் நெஞ்சங்கள் எங்கள் ஊர் எல்லையைக் காக்கும் கருப்பணச் சாமிகள் அவர்கள் இன்னும் நடுநிசிகளில் சாட்டைய�ோடு ஊருலா வருகின்றனர் உயிருக்கு உரமிடும் எம்மொழியின் காவல் தெய்வங்களாய்...

உள்ளத்தின் தீப்பொறி பெண்ணே...! காரிகையவள் கனவ�ொன்று கைசேர கள்ளமில்லா உள்ளமதில் எத்தனை கல்லடி த�ொப்புள்கொடி அறுத்த தாயவள�ோ த�ொடர்பறுத்தாலும் துணிந்து செல்லடி கணவனவன் காமத்திற்காய்க் கட்டிலில் காட்சி ப�ொம்மையாய் வாழ்ந்த நாள்கள் ப�ோதுமடி எதிர்த்து நிற்பது எவரென்றாலும் எதிர்த்து நில்லடி த�ோல்வி என்ற ஒன்று த�ோழியே உனக்கு ஏதடி ஏதுமறியா பதுமைப�ோல் இன்னும் எவ்வளவு நாள்கள் தான் செல்லுமடி

அனைத்துமறிந்த நீ புரிந்து க�ொள்ளாததும் ஏன�ோ கனவைவிட கட்டுடல் முக்கியம் தான�ோ சிட்டை சிறை பிடிப்பது ஆண�ோ இல்லை வேட்டையாடப் ப�ோவது மான�ோ ? காட்டை அழிக்க ஒரு ப�ொறி ப�ோதும் அது உன் நெஞ்சில் இல்லையா? வஞ்சியே! உணர்ச்சிகளின் பெருக்காய் எழுகின்ற கவிதையாய் ஐந்தின் உருவமாய் ஒற்றுமையின் சின்னமாய் அக்னிச் சிறகுடன் வா எழுந்து வா!

துணிந்து நீ எட்டு வைத்தால் இமயமும் உன் புகழ் பேசுமடி உன் நிலை கண்டு என் உடல் கூசுதடி பேதையே உன்னை எண்ணிக் கலங்கி என் மனம் ஏசுதடி பாரதி இனி வரமாட்டான் அடுத்த பார தீயாய் நீ எழாத வரை

ருத்ரா இராசபாளையம் தமிழ்நாடு

| 19

என் சுவாசக்காற்றே... சுவாசக்காற்றே

என் சுவாசக்காற்றே! எங்கெங்கும் ஏங்கிக் கிடக்கின்றோம் மூச்சுக்காற்றுக்காக பசுமை படர்ந்து பாரெங்கும் பரப்பிய மரங்களின் கரங்களை வெட்டி வீழ்த்தி கட்டிடங்கள் கட்டினர் வெட்டி மனிதர்கள் வளியில் கிருமிகள் கலந்து வெளியில் பரவிடச்செய்து துளியாய் சுவாசம் குறைக்கும் வலிமிகு தீநுண்மியின் பரவல் பசியும் பட்டினியும் மறந்து நாசியில் வாசம் இழந்து யாசித்துக் கிடக்கின்றோம் சுவாசக் காற்றுக்காக உருளையில் அடைத்து உன்னை உயிர்களைக் காக்கச் ச�ொல்லும் மதிகெட்ட (மா)மக்கள்நிறை உலகில் விதியென்றே வாழ்ந்து வீழ்வோம�ோ? இழந்திட எதுவுமில்லை, இதயத்தில் இன்பத்திற்கு வழியுமில்லை இனியாவது விதைத்திடுவ�ோம் விருட்சங்களின் துளி விதைகளை த�ொடரும் தலைமுறைக்காக வழங்கிடுவாயே சுவாசக்காற்றினை வணங்கிடுவ�ோமே பசுமை மரங்களை வசந்தம் தரும் நல்வரங்களாக

இர. பாக்கியலட்சுமி சுந்தரம் க�ோவை, தமிழ்நாடு

20 |

தித்திக்குமா வாழ்க்கை...? இருந்தன

நிலம் வீடு வாயில் எத்தனை கனவுகள் எத்தனை கற்பனைகள் அத்தனையும் அழிந்தன அதிகாலை வேளையிலே அதிர்ந்த குண்டு வெடிப்பினிலே அன்றைய விடியல் அத்தனை கறுப்பாக காப்பாற்றும் தெய்வம் என விழித்திருந்தன விழிகள் காலம் மாறுமென ஒவ்வொரு ந�ொடியிலும் ஒவ்வொரு நாளிலும் காப்பாற்றும் தெய்வமென காத்திருந்தன விழிகள் கைவிட்டன தெய்வங்கள் மும்மாரி ப�ொழிந்த மண்ணில் மாறி மாறி குண்டு மழை ப�ொழியுதே எம் குடி கெடுத்து வேரறுக்க அம்மாடி என் ச�ொல்வேன்? குழந்தை என்ற பேதமில்லை குமரி என்றும் பார்க்கவில்லை வாலிபம் வய�ோதிகம் பேதமில்லை தாயின்றி சேயும் சேயின்றி தாயும் உயிரின்றி உடல்களும் காலின்றிக் கையின்றி எத்தனை க�ொடுமை என்னுயிர் மக்களுக்கு! தேசம் இழந்தோம் கண்ணீர�ோடு கடலையும் கடந்தோம் கூடுகளின்றி அலையும் சிட்டுக்குருவிகளாய் எட்டுத்திக்கென எத்திக்கும் பறந்தோம் எத்திக்கு சென்றாலும் தித்திக்குமா வாழ்க்கை?

அ.சா. புவனேசுவரி புதுக்கோட்டை, தமிழ்நாடு

| 21

முற்றுப்புள்ளியின் முழுமை...? பிள்ளைக்குத் தாயாக அவதாரம்

கணவனுக்குத் தகுதியான தாரம் வேலைகளுக்கெல்லாம் ஒரு பேரம் உன் இச்சைக்குப்பின் அவள�ோ ஓர் ஓரம் வளரும்போது மகாலட்சுமி வளர்ந்த பின்பு தனலட்சுமி பள்ளியிலே இலட்சியலட்சுமி பருவத்திலே பாலியல் உமி பிறந்த வீடு நிலையில்லை புகுந்த வீடு புதுமைத்தொல்லை விடுமுறை நாளில்லை விடுவிக்க யாருமில்லை கற்பு பெண்ணுக்கு மட்டுமா கடவுளே நீயும் உடந்தையா விற்பனைப்பொருளா பெட்டை வரதட்சணையில் என்ன சேட்டை தீட்டென்பது பெண்ணுக்குத்தானா தீட்ட வேண்டியது புத்தியைத்தானா பாலியலுக்கும் காரணம் ஆணா பாலினம் வேறுபடுவதுதானா மாற்றுத்திறனாளிக்கும் முன்னுரிமை பாலியல் பிரச்சனைகளில் இதுவ�ோர் மாற்றுத்திறமையா இச்சை க�ொள்பவனுக்கு சாதித்து வாழ்பவள் பெண் சகித்து வாழ்பவள் பெண் இலகு மனதுடையாள் பெண் இலக்கணமற்ற அன்புதான் பெண் பெண்மையை மதிப்போம்! சிறுமையை மிதிப்போம்!!

22 |

இ. அமிதா

கடம்பூர், அரியலூர் மாவட்டம், தமிழ்நாடு

ஒற்றைவரி ம�ௌனம் எ ன் கனவுகளைக் கலைக்க வேண்டாம் நிழல் தரை ம�ொழுக பசும்புல் கட்டிலாய் மெத்தையிட வெண்புறா காதலில் பறக்க பறவையாய் இருந்தும் பறக்காத க�ோழியாய்

உயிரில் பாதி உயிர் ஒழுகி மீதமுள்ள உயிரை அவளில் நனைத்து பார்வைக்குக் கூர்மை தந்து ம�ௌனமாய் அவள் சென்ற பாதையில் ஏழாம் அறிவை ஊற்றிக் கண்விழித்தது இன்னும் காத்திருக்கிறேன் ஒற்றைவரி ம�ௌனம�ொழியாய்

ரய்லி மலேசியா

நூல் சாளரம்:

இடை - வெளியில் உடையும் பூ மலரச் செய்தவர்: ‘அன்புத்தோழி’ ஜெயஸ்ரீ வகை: கவிதைகள் முதற்பதிப்பு: திசம்பர் 2020 வெளியீடு: இடையன் இடைச்சி நூலகம், 120, சில்லாங் காட்டுப்புதூர், அரச்சலூர், ஈர�ோடு-638101 அழைக்க: 98412 08152 இந்நூல் பற்றி முன்னோடிக் கவிஞர் வைரமுத்து இப்படிக் கூறுகிறார்: “வெள்ளம்போல் பெருகிவரும் நவீனப்பெண் கவிஞர்கள் புதிய நம்பிக்கையைத் தருகிறார்கள். அவர்கள் குரலில் ஒரு தனித்துவம் த�ொனிக்கிறது. பெண்ணின் வலியைப் பெண்ணே ச�ொல்லும்போது நம்பகத்தன்மை கூடுகிறது. அவர்தம் கவிதைகள் இசங்களால் ஆனவை அல்ல, நிசங்களால் ஆனவை. சங்க காலத்திலிருந்தே பெண் கவிஞர்களின் பங்களிப்பு தமிழுக்கு வளம் சேர்த்து வந்திருக்கிறது. அந்தவகையில் ‘அன்புத்தோழி’ ஜெயஸ்ரீ படைத்திருக்கும் இடை- வெளியில் உடையும் பூ எனும் இக்கவிதைத் த�ொகுதியும் நம்பிக்கை தருகிறது” தமிழ்க் கவிதை உலகில் கவிப்பேரரசு என்றழைக்கப்படும் வைரமுத்துவின் பாராட்டுகளைப் பெற்றுள்ள இக்கவிதைத் த�ொகுதி அனைவரின் வாசிப்புக்கும் உகந்த கவிதைகளைத் தன்னகத்தே க�ொண்டிருப்பது சிறப்பு.

| 23

யுத்தம் செய்து முத்தமிட்டவள் இருபத்து மூன்று ஆண்டுகள் முன்னர்

மே திங்கள் முப்பதாம் நாள் நள்ளிரவிற்கு முன்பாக சரியாக பத்து மணியிலிருந்து பத்து முப்பது மணிக்குள் மருத்துவமனை பிரசவ அறையிலும் என் தாயின் கருவறையிலும் ஓர் யுத்தம் யுத்தம் முடிவுக்கு வந்தவுடன் மகிழ்வுடன் முத்தமிட்டிருப்பாள் தாய் சேய்க்கும் அது கிட்டியிருக்கும் - ஆனால் எனக்கோ கருவறையில் யுத்தம் முடிந்திருந்தாலும் மூச்சுக்குழாய�ோடு ஓர் யுத்தம் செய்ய ஆயத்தமாக வேண்டியிருந்தது பிராணவாயு பேழைக்குள் எனக்கும் அகப் பேழைக்குள் என் அன்னைக்கும் யுத்தம் த�ொடர்ந்தது வெற்றி நிகழ்ந்தது அதன் பிற்பாடாக முத்தங்கள் ஒன்றா இரண்டா முத்துக் குளித்தவர்களைக் கண்டதுண்டு - ஆனால் முத்தக்குளியல் கண்டவன் நான் யுத்தம் செய்து முத்தம் பெற்றவன் நான் யுகம் யுகமாய்ப் பல யுத்தச் செய்திகள் அத்துணையும் க�ோபத்தால் அழிவை ந�ோக்கியதாய் அமையப் பெறும் - ஆனால் அன்பால் நிகழும் யுத்தத்திற்கு உதாரணங்கள் பல இம்மண்ணில் கவிகள் பல பாடினாலும் உண்மையான அன்பின் யுத்தம் ஓர் அன்னையின் கருவறை யுத்தம் மட்டுமே!

வீ. அதிவீரபாண்டியன் தமிழ்நாடு

24 |

வீழ்வேனென்று...! வேதனை விண்மீன்களே

என் வானில் நித்தம் த�ோன்றினாலும் சாதனையெனும் நிலவின் ஒளி பருக சத்தமில்லாமல் காத்திருப்பேன் தளராது ச�ோதனைகள் வென்று ஆதவனின் கரம்பற்றியே ஆற்றல�ோடு எழுந்திடுவேன் சேற்றில் சுழலும் புழுவாய் விளக்கைச் சுற்றும் விட்டிலாய் இலக்கே இல்லாமல் தேங்கிக் கிடப்பேன் என்று நினைத்தாய�ோ தேர�ோடும் வீதியில�ோ ஒரு நாள் தெருவுக்குள் க�ொண்டாட்டம் தேரின் காத்திருப்போ தன்னைக் க�ொண்டாடும் அந்நாளுக்காகவே திண்டாடும் ப�ோதெல்லாம் வண்டாய்ப் பறப்பேனென நினைத்தாய�ோ ஆமையாய் ஆற்றல் இழக்காமல் சென்றிடுவேன் சாதனையின் வாசலில் என் பெயர் ப�ொறிக்கப்பட்டிருக்கும் தேடலின் முனைப்பில் ஓடலும் ஓடலில் ஒளிந்திருக்கும் நாடலும் என்னை வீழாது எழச் செய்யும் நான் வீழ்வேன் என்று நினைத்தவரையும் வீழ்த்த வீணில் முயன்றோரையும் வீழ்த்தும் ஓர்நாள் வாழ்வில் மலரும் அந்நாள் பாரே என்னைப் ப�ோற்றிடும் நான் வீழ்வேனென்று நினைத்தாய�ோ?

ஆ. முருகேசுவரி

சவூதி அரேபியா

| 25

கைகழுவும் சமகாலம்... இப்படித்தான்

ஏத�ோவ�ொன்றைக் கிறுக்கிச் செல்கிறேன் அது கவிதைக்குள் அடங்காதென்று இலக்கணம் ச�ொல்லும் உரைநடைக்கும் ஒவ்வாதென்று மறுப்பு கிடைக்கும் பாட்டென்றோ பழம�ொழியென்றோகூட ஏற்க முடியாதுப�ோகும் ஆளும் அம்புமாய் கண்டு க�ொள்ளப்படாது தவிர்க்கப்படும் பேரிலக்கியமும் சிற்றிலக்கியமும் அல்ல சமகாலமும்கூட கைகழுவும் இவை யாவும் தெரிந்தேதான் எழுதுகிறேன் இரசிகர்கள், பின்பற்றுவ�ோர் இன்றியும் படைக்கிறேன் த�ொல்லுலகின் மாந்தர்கள் இதழ்க்கடையில் த�ோன்றும் நையாண்டி கண்டும் கவனியாதும், காணாததுப�ோல் மறைத்தும் நகரும் சூழல் அறிந்தும் மன எழுச்சியை எழுத்தாக்கும் யாருக்கும் அங்கீகாரம் தேவைப்படுவதில்லை வடிகால்களுக்கு வாசல் நிச்சயமில்லை

அனுமா

சென்னை தமிழ்நாடு

26 |